சென்னை: விஷு புத்தாண்டையொட்டி, சென்னை கோடம்பாக்கம் ஐயப்பன் கோயிலில் மலையாளம் பேசும் மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து, சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் இந்நாளில் கை நீட்டம் எனப்படும் வயதில் மூத்தவர்கள், இளையோருக்கு பணம் கொடுப்பது மிகவும் விஷேசம் என்பதால், கோயில்களில் கை நீட்டம் பெறுவதற்காக அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் ஒரு ரூபாய் கை நீட்டம் வழங்கப்பட்டது.
பக்தர்களுக்கு கைநீட்டம் வழங்கப்பட்டது விஷு தினத்தில் கனி தரிசனம் செய்தால், வீட்டில் ஆண்டு முழுவதும் ஐஸ்வர்யம் நிறைந்திருக்கும் என்பதும், நாட்டில் மழை வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் செழிக்கும் என்பதும் மலையாளிகளின் நம்பிக்கை. அதற்காக பழங்கள் மற்றும் காய்கறிகள், தானியங்கள், ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தங்க நகைகள், கொன்றை மலர்கள் உள்ளிட்டவைகளை பிரார்த்தனைக்கு கொண்டு வந்து வைத்திருந்தனர். பின்பு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டும் நிகழ்வு சிறியவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி, கை நீட்டம் பெற்றனர். மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கு முதல் சோறும் இன்று ஊட்டப்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் நிஜ டாணாகாரர்கள்..!- காவலர்களின் துயரநிலை