தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்- எஸ்.ஐ., ஏஎஸ்பி பணியிட மாற்றம் - காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் தொடர்பான வழக்கில் காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்- SI, ASP பணியிட மாற்றம்
காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம்- SI, ASP பணியிட மாற்றம்

By

Published : May 14, 2022, 6:49 PM IST

சென்னை:சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கடந்த 18 ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த குற்றஞ்சாட்டினால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

மேலும் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், ஊர்க்காவல்படையை சேர்ந்த தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். மேலும் விக்னேஷின் உடலில் 13 இடங்களில் தாக்கிய காயங்கள் இருந்ததால் மேலும் சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி நடத்திய விசாரணையில் விக்னேஷ் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்ததையடுத்து கொலை வழக்காகப் பதிவு செய்து காவலர் பவுன்ராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக், தலைமைக் காவலர் எழுத்தர் முனாப், குமார், சந்திரகுமார், ஜெகஜீவன் ஆகிய 6 பேரை சிபிசிஐடி காவல்துறை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனத் தேசிய பட்டியலின ஆணையம் காவல் ஆணையருக்குக் கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாகத் தலைமைச் செயலக காலணி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தென்மண்டல காவல்துறைக்கு மாற்றம் செய்தும், அயனாவரம் உதவி ஆணையர் சரவணனைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், வழக்கில் தொடர்புடைய மற்ற காவல்துறை மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:விக்னேஷ் மரணம்: 12 மணி நேர தொடர் விசாரணை.. இரண்டு காவலர்கள் கைது - சிபிசிஐடி அதிரடி

ABOUT THE AUTHOR

...view details