சென்னை:உலகம் முழுவதும் ஜூன் மாதமானது LGBTQ மக்களுக்கான சிறப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு நேற்று(ஜூன்26) சென்னை எழும்பூரில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கி வைத்தார்.
LGBTQ சமூக அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் இயற்றப்பட்டுள்ள சட்டங்கள், கொள்கைகள் மற்றும் பிற செயல்களை கொண்டாடும் விதமாக பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்ட சின்னத்திரை தொகுப்பாளர் கல்யாணி கூறுகையில், " இங்கே ஒரு சிறப்பான நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. LGBTQ-ல் இருந்து நிறை அளவில் கலந்து கொண்டுள்ளனர்.
அதிகளவில் ஆதரவு வந்தால் தான் இந்த சமூகம் பற்றி மக்களுக்கு தெரியும். இன்றைக்கு தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பில் பேரணி நடைபெறுகிறது. அரசு இன்னும் ஆதரவு கொடுத்தால் நாம் வாழும் அளவிற்கு இவர்களும் வாழ முடியும்.