தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விசாரணைக்கைதி மரணம் - சென்னை காவல் ஆணையர் அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

விசாரணைக்கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

kodungaiyur

By

Published : Jun 13, 2022, 8:39 PM IST

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன்பாளையத்தைச் சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர்(33) என்பவரைத் திருட்டு வழக்குத்தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அப்போது ராஜசேகருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவரைப்பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்தவரை, உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது மரணடைந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காவல் துறையினர் தாக்கியதால்தான் ராஜசேகர் உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், ராஜசேகர் உடலை வாங்க, அவரது குடும்பத்தார் மறுப்புத்தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜசேகர் மரணம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

வழக்கை விசாரணைக்கு எடுத்த ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன், விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'மகனை போலீசார் அடித்து கொன்றுள்ளனர்' - ராஜசேகரின் தாய் பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details