தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய திமிங்கல சுறா! - big whale news

சென்னை: காசிமேட்டில் மீனவர்களின் வலையில் சிக்கிய 2 டன் எடையுள்ள திமிங்கல சுறா மீண்டும் கடலில் விடப்பட்டது.

காசிமேட்டு மீனவர்கள் வலையில் சுறா திமிங்கலம்
காசிமேட்டு மீனவர்கள் வலையில் சுறா திமிங்கலம்

By

Published : Dec 22, 2020, 12:57 PM IST

சென்னை காசிமேடு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றார். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது தெரியவந்தது.

கரை திரும்பி அவர்கள், வலையில் சிக்கியது இரண்டு டன் எடையுள்ள திமிங்கல சுறா என்பதை அறிந்தனர். இதுதொடர்பாக மீன்வளத் துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிருக்கு போராடிய திமிங்கல சுறாவின் மேல் மீனவர்கள் தண்ணீர் அடித்தனர்.

காசிமேடு மீனவர்கள் வலையில் சிக்கிய திமிங்கல சுறா

இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலர்களின் அறிவுறுத்தல் படி, திமிங்கல சுறா மீண்டும் கடலில் விடப்பட்டது. பிடிப்பட்ட திமிங்கல சுறாவின் எடையானது, சுமார் 2 டன்னுக்கு மேல் இருக்கும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...40 பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details