இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”ஆட்டோ மொபைல் துறையில், எடை அதிகமுள்ள அலுமினியம், ஸ்டீல் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு மாற்றாக எடை குறைவான மெக்னீசியத்தை பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மெக்னீசியத்தால் ராக்கெட், கார், விமானம் போன்றவற்றை குறைந்த செலவில் தயாரிக்க முடியும். மெக்னீசியத்தாலான பொருட்களைக் கொண்டு வாகனங்கள் தயாரித்தால், அதில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவின் அளவினை குறைக்க முடியும். இதன் மூலம் உலகளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.
இதற்கான ஆராய்ச்சியில் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து சென்னை ஐஐடியும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சென்னை ஐஐடி, அமெரிக்காவிலுள்ள வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து, மெக்னீசியத்தை வலிமையான, அதேசமயம் எடை குறைவான உலோகமாக மாற்றும் ஆராய்ச்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளது.