தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஐஐடியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்கும் என்பது வரவேற்புக்குரியது' - சென்னை ஐஐடி இயக்குநர் - அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிக்கும் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்

"அரசுப்பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிப்பதற்கான கல்விச்செலவை முழுவதையும் அரசே ஏற்கும்" என்ற திட்டம் மாணவ-மாணவியர்களுக்கு சென்றடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று (Chennai IIT) சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி
சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி

By

Published : Mar 18, 2022, 5:08 PM IST

சென்னை: 2022-23ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, மார்ச் 18ஆம் தேதி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிப்பதற்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இது குறித்து (Chennai IIT) சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி கூறுகையில், 'அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிப்பதற்கான செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்ற இந்தத்திட்டம் பல மாணவர்களை சென்றடைய முயற்சிகளை எடுப்போம். இந்தத் திட்டம் வரவேற்கத்தக்க அறிவிப்பு ஆகும். சென்னை ஐஐடி தமிழ்நாடு அரசுடனும், அரசுப் பள்ளிகளுடன் சேர்ந்து இந்தத்திட்டம் பல மாணவர்களை சென்றடைய முடிந்த முயற்சிகளை எடுப்பேன்' எனத் தெரிவித்தார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பல்துறை கல்வி

சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி தகவல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசியதாவது, 'இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும்.

அத்துடன் மேலும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்' எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2022-23... எந்தத் துறைக்கு எவ்வளவு... முழுவிவரம் உள்ளே..!

ABOUT THE AUTHOR

...view details