தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த பெண் ...செல்போனை ஆய்வு செய்ய முடிவு - ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை

ஆவடி அருகே தண்டவாளத்தில் கிடந்த பெண்ணின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவரது செல்போனை ஆய்வு செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐஐடி மாணவி
ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐஐடி மாணவி

By

Published : Aug 20, 2022, 1:21 PM IST

Updated : Aug 20, 2022, 10:42 PM IST

சென்னை:ஆவடி ரயில் நிலையத்திற்கும், இந்துக்கல்லூரி ரயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் தலை, முகம் ஆகியவற்றில் காயங்களுடன் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக ஆவடியில் வேலை செய்து வந்த ரயில்வே பணியாளர்கள், ரயில்வே காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் கிடைத்த இந்த தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் உயிரிழந்தது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் பதான் என்பவரின் மகள் மேகாஶ்ரீ (30) என்பது தெரியவந்தது. மேலும் திருமணமாகாத இவர் டெல்லியில் எம்.டெக், மற்றும் முதுகலை(Phd) பட்டம் பெற்று தற்போது சென்னை அடையாறில் உள்ள ஐ.ஐ.டி.மைய விடுதியில் தங்கி ஐ.ஐ.டி கல்லூரியில் மூன்று மாத ஆராய்ச்சி படிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

மேகா ஸ்ரீ எதற்காக இங்கு வந்தார்? எனவும் யாரையும் சந்திக்க செல்லும் பொழுது ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது வேறு எதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசாவில் இருந்து அவரது உறவினர்கள் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பின் மேகாஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு தந்தை இல்லை எனவும் தாய் மாமாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்றிரவே அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் அவர் தவறி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் கூறினர். அவரை பரிசோதித்ததில் பயணச்சீட்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். அவரின் செல்போன் சீலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், செல்போனை ஆய்வு செய்த பின் மேலும் தகவல்கள் தெரிய வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகள் அமெரிக்க ஏலகூடத்தில் கண்டுபிடிப்பு

Last Updated : Aug 20, 2022, 10:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details