சென்னை:ஐஐடி உதவிப் பேராசிரியர் விபின் பி. வீட்டில், ஐஐடியில் நிலவும் சாதிய பாகுபாடு காரணமாக பணியில் இருந்து விலகுவதாக மின்னஞ்சல் மூலம் புகார் அளித்திருந்தார். அவர், பணியிலிருந்து விலகியது தொடர்பாக விளக்கம் கேட்டதற்கு, ஐஐடி நிர்வாகம் அதுகுறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்டது
சாதிய பாகுபாடு: உதவிப் பேராசிரியர் பணி விலகலுக்கு ஐஐடி விளக்கமளிக்க மறுப்பு - சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் பணிவிலகல்
சாதிய பாகுபாடு காரணமாக உதவிப் பேராசிரியர் விபின் பணியில் இருந்து வெளியேறியது குறித்து ஐஐடி நிர்வாகம் விளக்கமளிக்க மறுத்துள்ளது.
CHENNAI IIT
மேலும், 'ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர்கள், பயிலும் மாணவர்கள் ஆகியோரின் குறைபாடுகள் குறித்து நிர்வாகத்தின் கவனத்திற்கு உரிய முறையில் புகார்கள் வரும் பட்சத்தில், நிர்வாகம் அவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்" என ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் தொடரும் சாதிய பாகுபாடு; பணியிலிருந்து விலகிய உதவிப் பேராசிரியர்!