சென்னை ஐஐடியின் தொழில் முனைவோர் மையத்தின் மூலம் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக பாதுகாத்துக் கொள்வதற்காக 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, முழு முகமும் மறையும் அளவிற்கான முகக் கவசம் தயாரித்துள்ளனர்.
சென்னை ஐஐடி தயாரித்துள்ள ’3டி’ முகக் கவசம்! - ஐஐடி
சென்னை: ஐஐடியில் 3டி பிரிண்டிங் மூலம் முழு முகமும் மறையும் அளவிற்கான முகக் கவசம் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

mask
இந்த முகக் கவசம் குறைந்த விலையில் வழங்க முடியும் எனவும் ஏற்கனவே இதனை மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு தயாரித்து வழங்கியுள்ளதாகவும் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. கரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் இந்நேரத்தில், இந்த மாதிரியான முழு முகத்தையும் மூடக்கூடிய பாதுகாப்பான கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.
சென்னை ஐஐடி தயாரித்துள்ள ’3டி’ முகக்கவசம்!
இதையும் படிங்க: கோயம்பேடு சந்தை வியாபாரிகளுக்கு கரோனா கண்டறிதல் சோதனை!