தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடல்நீர் உள்புகுவதைத் தடுக்கும் வகையில் வயலூரில் தடுப்பணை! - சென்னை ஐஐடி

சென்னை: ஐஐடி வடிவமைப்பில் நவீன தொழில்நுட்பத்தில் வயலூர் அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

dam
dam

By

Published : Jan 20, 2020, 7:42 PM IST

இது குறித்து ஐஐடி பேராசிரியர் சுந்தரவடிவேலு கூறியபோது, ”தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை சார்பில் கல்பாக்கம் அனல்மின் நிலையத்தின் சமூக சேவை நிதித் திட்டத்தின் மூலம், வயலூரில் தடுப்பணை கட்டுவதற்கான வடிவமைப்பு கேட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, வயலூரில் பாலாற்றின் குறுக்கே முகத்துவாரத்தில் மண்ணின் வளத்தினை ஆய்வுசெய்தோம்.

மண் தன்மையின் அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தடுப்பணை கட்டும் பணியைத் தொடங்கினோம். வழக்கமாகப் பொதுப்பணித் துறையினர் மேற்கொள்ளும் கட்டுமான முறையிலிருந்து மாற்றி 4 மீட்டர் இடைவெளியில் தனித்தனியாக 12 மீட்டர் ஆழத்திற்கு தூண்கள் அமைத்தோம். அந்தத் தூண்கள் மீது ஆற்றின் மொத்த நீளமான 1,200 மீட்டர் தூரத்திற்கு தடுப்பணை கட்டியுள்ளோம்.

களிமண் பகுதிவரை தடுப்பணை உள்ளதால் கடல்நீர் உள்ளே வருவது தடுக்கப்படும். மேலும், மணல் பகுதி முழுவதும் தண்ணீர் சென்று நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். இன்னும் பல இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான திட்டம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

இன்னும் பல இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான திட்டம் உள்ளது

இதையும் படிங்க: வனத்தை மீட்க வழிகாட்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு! - சிறப்புக் கட்டுரை

ABOUT THE AUTHOR

...view details