அண்ணாநகரில் பாரம்பரியம் என்ற பெயரில் தனியார் உணவு விடுதி இயங்கிவருகிறது. இன்று அதிகாலையில் விடுதியின் பெயர்ப் பலகையில் மின்கசிவு காரணமாக தீ பற்றியுள்ளது. பின்னர் தீ மளமளவென உணவகம் முழுவதும் பரவியதையடுத்து, ஊழியர்கள் அனைவரும் உடனடியாக உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஆனால், உணவக சமையலரான திருநெல்வேலியைச் சேர்ந்த, வெனிட் சகாயம் மட்டும் கழிவறையில் இருந்துள்ளார். உணவகம் முழுவதும் தீ பரவியிருந்ததால், சகாயம் உள்ளேயே புகைமூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.
விபத்து குறித்து தகவலறிந்த ஜெ.ஜெ. நகர் தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்துவந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர் மயங்கிக் கிடந்த சகாயத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அப்போது, சகாயத்தை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
மின்கசிவால் தீ விபத்து - சமையலர் உயிரிழப்பு இவ்விபத்து தொடர்பாக அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: சிகரெட்டுக்காக அண்ணனை கொலை செய்த தம்பி!