பணப் பிரச்னை தொடர்பாக சக்தி பைனான்ஸ் நிறுவனத்திற்கு எதிராக எம்.சி. சுப்ரமணியம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதால், வழக்கை திரும்பப்பெற அனுமதி கோரி எம்.சி. சுப்ரமணியம் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்குத் தொடர்பாக செலுத்தப்பட்டக் கட்டணத்தை மனுதாரருக்குத் திரும்ப வழங்க உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி பதிவுத்துறையை அணுகி நீதிமன்றக் கட்டணத்தை திரும்பத் தரக்கோரியபோது, வாபஸ் பெறப்பட்ட வழக்கிற்கு கட்டணத்தை திரும்பத்தர விதிகள் ஏதும் இல்லை என வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி எம்.சி. சுப்ரமணியம் வழக்குத் தொடர்ந்தார்.