தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாசனின் 'சின்ன'ம் கோரிக்கை - பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - மாநிலத் தேர்தல் ஆணையம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கு சின்னம் ஒதுக்கக் கோரும் தமிழ் மாநில காங்கிரசின் மனு மீது நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

vasan
vasan

By

Published : Dec 16, 2019, 7:48 PM IST

1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதன்பின் நடந்த மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் 2001 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது.

பின், 2002ஆம் ஆண்டு காங்கிரசுடன் இணைந்த அக்கட்சி, 2014ஆம் ஆண்டு அதிலிருந்து வெளியேறி, மீண்டும் தமாகா என்ற பெயரில் செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில், வரும் உள்ளாட்சித் தேர்தலில் சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்கக்கோரி தமாகா சார்பில் மாநிலத் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால், அந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததைத் தொடர்ந்து மூன்றில் ஒரு சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கு நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் சின்னம் ஒதுக்கக்கோரி தமாகா உடனடியாகப் புதிய விண்ணப்பம் அளிக்கும்படி அறிவுறுத்தினர்.

அந்த விண்ணப்பத்தை சட்டத்திற்குள்பட்டு பரிசீலித்து நாளைக்குள் உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: ‘உள்ளாட்சித் தேர்தல் நடந்தால்தான் கிராமங்கள் பயனடையும்’ - ஜி.கே. வாசன்

ABOUT THE AUTHOR

...view details