தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விதிகளை மீறிய பங்களாவை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - உயர்நீதிமன்றம்

சென்னை: முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 5 சொகுசு பங்களாக்களுக்கான மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும், ஒரு சொகுசு பங்களாவை இடிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

orders
orders

By

Published : Jan 21, 2020, 7:50 PM IST

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் விதிகளை மீறி கட்டியுள்ள சொகுசு பங்களாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதில், முட்டுக்காடு பகுதியில் உள்ள சொகுசு பங்காளாக்கள் விதிகளுக்குள்பட்டு கட்டப்பட்டுள்ளதா என ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்ய உயர் நீதிமன்றம் ஏற்கெவே உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், முட்டுக்காடு படகு குழாம் அருகே உள்ள கடற்கரையில் தமிழ்நாடு பொதுப்பணித் துறை அலுவலர்களும், கடலோர ஒழுங்குமுறை மண்டல அலுவலர்களும் இணைந்து ஆய்வில் ஈடுபட்டனர்.

அதில், கட்டுமானங்கள் கட்டத் தடைசெய்யப்பட்ட பகுதியில் சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டிருப்பதாகவும், கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்குள் கட்டப்பட்டுள்ள இந்தச் சொகுசு பங்களாக்கள் அப்புறப்படுத்த வேண்டியவை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கேரள மாநிலம் மராடுவில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டதைச் சுட்டிகாட்டிய நீதிபதிகள், முட்டுக்காடு கடற்கரையோரம் விதிகளை மீறி சர்வே எண் 114இல் கட்டப்பட்டுள்ள ஐந்து சொகுசு பங்களாக்களின் மின்சாரம், தண்ணீர் விநியோகத்தை துண்டிக்கவும், ஒரு சொகுசு பங்களாவை இடிக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் பங்களா இடிக்கப்பட வேண்டும் என்றும் இதற்கான செலவை அந்தச் சொகுசு பங்களாவின் உரிமையாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ’கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கக் கோரிக்கை’

ABOUT THE AUTHOR

...view details