தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சமூக வலைதளங்களில் ஆபாச அவதூறு பதிபவர்களைக் கண்டறிய சிறப்புப் பிரிவு அமைக்க உத்தரவு! - சமூக வலைதளம்

சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளைப் பதிவுசெய்பவர்களைக் கண்டறிய காவல் நிலையங்களில் சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காவல் துறை இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

media
media

By

Published : Jan 30, 2020, 6:13 PM IST

சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் ஆபாசமாகச் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இந்த நிலையில் அவர் பிணை கேட்டுத் தொடர்ந்த வழக்கு, நீதிபதி தண்டபாணி முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சமூக வலைதளங்களில் ஆபாச, அவதூறு கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த ஒரு முறையான நடைமுறையும் இல்லை என வேதனை தெரிவித்தார்.

இச்செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அவர், அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது என்றும் எச்சரித்தார்.

எனவே, சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளைப் பதிவுசெய்பவர்களைக் கண்டறிய மாவட்ட, மாநில அளவில் அனைத்து காவல் நிலையங்களிலும் இரண்டு மாதத்திற்குள் சிறப்புப் பிரிவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை இயக்குநருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அவதூறு கருத்துகளைப் பதிவுசெய்பவர்களைக் கண்டறியும் நிபுணத்துவத்தை, சிறப்புப் பிரிவில் நியமிக்கப்படுவோருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும், தன்னுடைய பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதால் மருதாசலத்திற்கு முன் பிணை வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கனிமொழிக்கு எதிரான வழக்கு: விசாரிக்க இடைக்கால தடை

ABOUT THE AUTHOR

...view details