தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இன்று(ஆகஸ்ட் 18) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து, தடை தொடரும் என உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை தொடரும் - உயர் நீதிமன்றம் - ஸ்டெர்லைட் வழக்கு
10:07 August 18
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் வழங்கினர். மேலும் தீர்ப்பின் முழு விவரம் மதியம் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:'ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு: நீதிக்கு கிடைத்த வெற்றி' - வைகோ