சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நின்னக்கரை ஏரியைச் சுற்றி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து சுத்திகரிப்பு செய்யப்படாமல் கழிவு நீரை விடுவதால் ஏரி மாசுபடுகிறது. மேலும் அப்பகுதியின் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. எனவே, நின்னக்கரை ஏரியைப் பாதுகாக்கக்கோரி கடந்த 2018இல் இளங்கோவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உயர் அதிகாரி நேரில் ஆஜரானார். இதையடுத்து நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.