தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - hindu charities

திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டு அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jan 22, 2022, 6:31 AM IST

சென்னை: திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசாமி கோயில், மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தான் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ஏக்கர் நிலத்தையும்,

சொத்துக்களையும் அபகரிக்க 20-க்கும் மேற்பட்ட குழுக்கள் முயற்சி செய்து வருவதாகவும், அதனை தடுத்து கோயில் சொத்துகளை பாதுகாக்கக் கோரி, வழக்கறிஞர் ஜெகன்நாத் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருப்போரூர் கந்தசாமி கோயில், ஆளவந்தான் கோயிலின் சொத்துக்களை மறு உத்தரவு வரும் வரை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை சார்பில் மனுதாரர் குறிப்பிட்டுள்ள நாளிலே சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 19.71 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் மீட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், சொத்துக்கள் மீட்பு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: திரெளபதி அம்மன் கோயிலில் எருது விடும் விழா

ABOUT THE AUTHOR

...view details