தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால், குடும்ப நல நீதிமன்றம் துணை நிற்காது!

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

chennai high court, living together, matrimonial right, குடும்ப நல நீதிமன்றம், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால், லிவ்விங் டுகெதர்
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால், குடும்ப நல நீதிமன்றம் துணை நிற்காது

By

Published : Nov 5, 2021, 5:32 PM IST

சென்னை: கோயம்புத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், ஜோசப் பேபி என்பவரை 2013ஆம் ஆண்டு திருமணம் செய்ததாகவும், 2016 முதல் ஜோசப் தனியாக வசித்து வருவதால், தங்களை சேர்த்து வைக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால், தனக்கும், கலைச்செல்விக்கும் திருமணம் நடக்கவில்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரிக்கக் கோரி ஜோசப் பேபியும் மனுதாக்கல் செய்தார்.

இரு மனுக்களையும் விசாரித்த கோவை நீதிமன்றம், கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

லிவிங் டூ கெதர் பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தை நாடமுடியாது

இதை எதிர்த்து கலைச்செல்வி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், நீதிபதி விஜயகுமார் அடங்கிய அமர்வு, பணப்பரிவர்த்தனை தொடர்பான முன் விரோதத்தால் கலைச்செல்வி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது ஆதாரங்களில் இருந்து தெளிவாகத் தெரிவதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள், தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை எனவும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:சிசிடிவி பதிவு: நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய வாகனம் - தந்தை, மகன் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details