சென்னை: சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பரிசோதனை மேற்கொள்வதையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் ஐஐடியின் மருத்துவர்களிடம் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும் அறிவுறுத்தினார்.
சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கரோனா - சுகாதாரத்துறை செயலாளர் மீண்டும் ஆய்வு! - ஐஐடியில் 30 பேருக்கு கரோனா
சென்னை ஐஐடி வளாகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஐஐடியில் சுகதாரத்துறை செயலாளர் மீண்டும் ஆய்வு!
சென்னை ஐஐடி வளாகத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறதி செய்யப்பட்டதையடுத்து, தொடர்ந்து 700 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் 30 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மாஸ்க் அணியாவிட்டால் ரூ500 அபராதம்!- மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
Last Updated : Apr 22, 2022, 5:10 PM IST