கரோனா அச்சுறுத்தலை அடுத்து தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாவட்ட நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - district courts reopen
சென்னை: தமிழ்நாட்டில் திருவாரூர், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தற்போது பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் சங்கங்களின் கோரிக்கையுடன் மாவட்ட முதன்மை நீதிபதிகளின் கருத்துகளைப் பெற்ற சென்னை உயர் நீதிமன்றம், அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளும், நீதிமன்ற அறையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க அனுமதியளித்துள்ளது.
தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர், சிவகங்கை ஆகிய ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐந்து வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும், வழக்கு தொடர்ந்த மனுதாரரை அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற அறைகளில், சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு பின் இந்த நடைமுறை மறு ஆய்வு செய்யப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா நிதியுதவி வழங்குமாறு மீனவர்கள் கோரிய வழக்கு தள்ளுபடி