தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு! சிசிடிவி காட்சிகள்! - chennai government bus accident

சென்னை: அண்ணா சாலையில் அரசுப் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான காணொலி பதிவுகள் வெளியாகியுள்ளன.

chennai government bus accident, அரசு பேருந்து மோதி பெண் ஒருவர் பலி
chennai government bus accident cctv

By

Published : Dec 21, 2019, 1:31 PM IST

சென்னை அண்ணா சாலையில் நேற்று பகல் 2 மணியளவில் சூரிய நாராயணன் என்பவர், இருச்சக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை ஆனந்த் திரையரங்கம் பேருந்து நிறுத்தம் அருகே ஜெமினி பாலம் நோக்கி சென்ற அரசு பேருந்து இவர்கள் ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது.

இதில், இருவரும் கீழே சரிந்து விழுந்தபோது, எதிர்பாரா விதமாக எழிலரசி மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த அவரது கணவர் சூரிய நாராயணனுக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லண்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிரெக்ஸிட்!

பின்னர் இது தொடர்பாக அடையார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் துறை விசாரணை செய்து பேருந்து ஓட்டுநர் வெங்கடேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தற்போது இது தொடர்பாக கண்காணிப்பு படக்கருவியின் பதிவுகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு! சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details