தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் 13,289 பேருக்கு கரோனா சிகிச்சை!

By

Published : Oct 17, 2020, 1:42 PM IST

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 13,289 பேர் தற்போது சிகிச்சையில் இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

chennai
chennai

சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வடசென்னை பகுதிகளில் நோய்த்தொற்று குறைந்தாலும் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில் தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதுவரை 1 லட்சத்து 87 ஆயிரத்து 852 பேர் இத்தொற்றுக்கு ஆளாகி, அதில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 75 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி, குணமடைந்தோர் எண்ணிக்கை 91 விழுக்காடாகவும், இறப்பு 1.86 சதவீதமாகவும் உள்ளது.

மண்டல வாரியான பாதிக்கப்பட்டோர் பட்டியல்:

தேனாம்பேட்டை - 17,833 பேர்

கோடம்பாக்கம் - 20,611 பேர்

அண்ணா நகர் - 20,709 பேர்

ராயபுரம் - 17,153 பேர்

தண்டையார்பேட்டை - 14,937 பேர்

திரு.வி.க. நகர் - 14,504 பேர்

அடையாறு - 14,677 பேர்

வளசரவாக்கம் - 12,136 பேர்

அம்பத்தூர் - 13,219 பேர்

திருவொற்றியூர் - 5,747 பேர்

மாதவரம் - 6,782 பேர்

ஆலந்தூர் - 7,622 பேர்

சோழிங்கநல்லூர் - 5,174 பேர்

பெருங்குடி - 6,717 பேர்

மணலி - 2,962 பேர்

இதுவரை இத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details