மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அதனோடு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை நிலவி வருவதால், தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று (அக்.22) காலை வெயில் அடித்த நிலையில், மாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. மாநகரின் மத்தியப் பகுதியான அண்ணா சாலை, எழும்பூர் போன்ற இடங்கள் தண்ணீரில் தத்தளித்தன. நுங்கம்பாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 6.5 செ.மீ மழை பதிவானது. இது இயல்பை விட அதிகமாகும்.