தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

chennai flood risk management committee : வெள்ள பாதிப்பு - நிரந்தர தீர்வு - flood control management

chennai flood risk management committee : சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசிடம் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

By

Published : Dec 27, 2021, 7:57 AM IST

சென்னை: chennai flood risk management committee : மழையினால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 18 பேர் அடங்கிய பெருநகர சென்னை வெள்ள இடர் தனிப்பு மற்றும் மேலாண்மை குழுவினை தமிழ்நாடு அமைத்தது.

இந்தக் குழு சென்னை மாநகரில் வெள்ள பாதிப்புக்குக் காரணமான அனைத்து காரணிகளையும் புவியியல் மற்றும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண மூன்று வகையான திட்டங்களை தயாரிக்க உள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

இந்தக் குழு மேற்கொள்ள உள்ள திட்ட நடவடிக்கைகள் குறித்து முதற்கட்டமாகத் தமிழ்நாடு முதலமைச்சருடன் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் டிசம்பர் 12ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.

சென்னை மாநகராட்சி

மூன்று வகையான திட்டம், அதனைத் தயாரிக்கத் தேவையான கால அவகாசம் மற்றும் திட்டச் செயலாக்கத்திற்கான தோராய திட்ட மதிப்பீட்டுத் தொகை உள்ளிட்டவை பற்றி இடைக்கால திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், இடைக்கால திட்ட அறிக்கையை வரும் 31ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மிகவும் மோசமான மழை பாதிப்புக்கு உள்ளான 561 இடங்களுக்கு தற்காலிக தீர்வுகள் முன்வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: PMK Ramadoss Speech: பாமகவிற்கு வாக்களிக்காமல் இருப்பது கொள்ளிக்கட்டையை தலையில் போடுவதற்கு சமம்..!” - மருத்துவர் ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details