சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி இன்று (டிசம்பர் 22) எழும்பூர் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3300 சதுரடி பரப்பளவுள்ள மனை - வணிக கட்டடம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து திருக்கோயில் வசம் பெறப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சீராய்வு கூட்டங்களின் அறிவுறுத்தலின்படி துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான 3300 சதுரடி பரப்பளவுள்ள மனை - கட்டடம் பாலகிருஷ்ணன் என்பவரிடம் 33 ஆண்டுகளாக வாடகைக்கு விடப்பட்டிருந்தது.