சென்னை தேனாம்பேட்டை போயஸ் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் கட்டடம் கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
தேனாம்பேட்டையில் தற்போது புதிய கட்டடம் ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில், கட்டடம் கட்டும் இடத்திற்கு வந்த திமுக வட்டச் செயலாளர் சாமிவேல் உட்பட மூன்று பேர், அங்கு சூப்பர்வைசராக இருக்கும் ரகுபதி மற்றும் ஊழியர்களை மாமூல் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்துள்ளனர்.
மேலும், ’இது எங்க ஏரியா, என்னிடம் அனுமதி வாங்காமல் கட்டடம் கட்டக்கூடாது’ எனவும் கொலை மிரட்டல் விடுத்து, சூப்பர்வைசரையும் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, கட்டட நிறுவன உரிமையாளர் ரவிச்சந்திரன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர், திமுக வட்டச் செயலாளர் சாமிவேலை கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்க: உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்