தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் தீவிர கரோனா ஒழிப்புப் பணி - மாநகராட்சி தகவல் - சென்னை மாநகராட்சி

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 21.65 லட்சம் லிட்டர் கிருமி நாசினி கொண்டு தீவிர கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

corporation
corporation

By

Published : May 25, 2020, 2:27 PM IST

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கரோனா தடுப்புப் பகுதிகளில், பல்வேறு விதமான தெளிப்பான்கள் மூலம் ’லைசால்’ என்னும் கிருமி நாசினி தெளிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

292 வாகனங்கள் மூலம் பல்வேறு வித பெரிய தெளிப்பான்கள் மூலம், ’சோடியம் ஹைப்போ குளோரைட்’ எனும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளுக்கு இதுவரை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 307 லிட்டர் லைசால் மற்றும் 20 லட்சத்து 59 ஆயிரத்து 625 லிட்டர் சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமி நாசினிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் தீவிர கரோனா ஒழிப்புப் பணி

கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகளில், பணியாளர்கள் முழு உடல் கவசம் அணிந்து காலை மாலை இருவேளையும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கரோனா நோய் தடுப்புப் பணியில் 2,180 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்று (மே 24) சென்னையில் மட்டும் 587 பேருக்கு கரோனா: அச்சத்தில் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details