தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெயர் பலகைகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை!- சென்னை மாநகராட்சி அதிரடி! - பெயர் பலகைகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை

சென்னையில் உள்ள தெருக்களின் பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் செய்யும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெயர் பலகைகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை!- சென்னை மாநகராட்சி அதிரடி!
பெயர் பலகைகளில் நோட்டீஸ் ஒட்டினால் நடவடிக்கை!- சென்னை மாநகராட்சி அதிரடி!

By

Published : Apr 22, 2022, 8:58 AM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளிலும் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் இனி அமைக்கப்பட உள்ள பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் மற்றும் இதர விளம்பரங்களை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டம் 1959ன் படி (Tamilnadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) காவல் நிலையங்களில் புகார் அளித்து சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க:மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் அபராதம் -சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details