சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. மேயரை தலைவராகக் கொண்டு செயல்படும் நியமனக் குழுவில் ஆணையர் மற்றும் இரண்டு மாமன்ற உறுப்பினர்கள் இருப்பர். இந்த இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்யும் மறைமுக தேர்தலில் ராஜா அன்பழகன் மற்றும் சொ.வேலு ஆகிய திமுகவின் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி நியமனக் குழு மறைமுக தேர்தல் - திமுக வெற்றி - சென்னை மாநகராட்சி நியமனக் குழு போட்டியின்றி திமுக வெற்றி
சென்னை மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தலில் ராஜா அன்பழகன் மற்றும் சொ.வேலு ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
நியமனக்குழு கூட்டம், மாதந்தோறும் மேயர் தலைமையில் ஆணையாளர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மாமன்ற உறுப்பினர்கள் கொண்டு நடத்தப்படும். குறிப்பாக நியமனக்குழு செயல்பாடு என்பது மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது, நேர்காணல் மூலம் அவர்களுக்கு பணி ஆணை வழங்குவது, மாநகராட்சியில் உள்ள அனைத்து துறைகளிலும் கோப்புகளை மன்றத்திற்கு பரிந்துரைப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் நியமனக்குழுவின் பங்கீடு இருக்கும்.
இதையும் படிங்க:வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்- உச்ச நீதிமன்றம்