சென்னை: உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் போதிய மருத்துவ வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டது. சென்னை மாநகராட்சியின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது கரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது.
கரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி ரூ.310.49 கோடி செலவு செய்துள்ளது. இதில் கரோனா கேர் சென்டரில் உணவு வழங்க மட்டும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.41.53 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மருந்து மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட பொருள்கள் வாங்க ரூ.72.57 கோடியும், கருவிகள் வாங்க ரூ.1.78 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது.