தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் ரூ.150. 45 கோடி மதிப்பில் புதிய மழைநீர் வடிகால் - chennai rain water drainage

(Chennai storm run off)தென் சென்னை கோவளம் வடிநில பகுதிகளில் ரூ.150. 45 கோடி மதிப்பில் ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

150.45 cr storm run off  chennai corporation has planned  KFW German bank sponsored  சென்னை கோவளம் வடிநில பகுதிகளில் 150. 45 கோடி மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி  மூன்று திட்டக்கூறுகள்  ஜெர்மன் வங்கியின் நிதி உதவி
சென்னை மாநகராட்சி

By

Published : Dec 20, 2021, 7:15 AM IST

சென்னை: (Chennai storm run off)தென் சென்னை கோவளம் வடிநில பகுதிகளில் 150. 45 கோடி மதிப்பில் ஜெர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் தென்சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான ராம் நகர், மடிப்பாக்கம், குபேரன் நகர், பள்ளிக்கரணை, சோளிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் கோவளம் வடிநில பகுதியில் 1714 கோடி மதிப்பில் KFW ஜெர்மன் நாட்டு வங்கி நிதி உதவியுடன் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ள அரசு நிர்வாக அனுமதி பெறப்பட்டு உள்ளது.

மூன்று திட்டக்கூறுகள்

மேலும் கோவளம் வடிநிலப் பகுதி M1, M2 மற்றும் M3 திட்ட கூறுகளாக பிரிக்கப்பட்டு இப்பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொழில்நுட்ப வல்லுநர் குழு மூலமாக வடிவமைக்கப்பட்டு மழைநீர் கடத்தும் திறனை கணினி மென்பொருள் மூலமாக ஆய்வு செய்து இறுதி வடிமைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மன் வங்கியின் நிதி உதவி

அதனடிப்படையில் கோவளம் வடிநிலை பகுதியில் ஜெர்மன் நாட்டு வங்கி நிதி உதவியுடன் அமைக்கப்பட உள்ள ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்ட பணியில் M1 திட்டக் குழுவில் உள்ள ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் மிகவும் அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளான கண்ணன் காலனி, நேரு காலனி ,நங்கநல்லூர் ,பி.வி.நகர் சதாசிவம் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் உள்ள 139 தெருக்களில் 7.20 கி.மீநீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால்கள் 95 தெருக்களில் 12. 60 கி.மீ நீளத்திற்கு பழுதடைந்த மழைநீர் வடிகால் களை மறு சீரமைக்கும் பணிகளும் என மொத்தம் 234 தெருக்களில் 39.80 கிமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

ஒப்புதல்

இப்பணிகளுக்காக தயாரிக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய் வடிவமைப்புகள் KFW ஜெர்மன் நாட்டு வங்கியின் ஒப்புதல் பெறப்பட்டு மூன்று சிப்பங்களாக பிரிக்கப்பட்டு 150. 45 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வடிகால் அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.

இப்பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விரைவில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் இதன் மூலம் வரும் காலங்களில் மழைநீர் தேங்குவது முற்றிலும் தவிர்க்கப்படும் என சென்னை மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாநாடு 25ஆவது நாள் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி!

ABOUT THE AUTHOR

...view details