சென்னை:கடந்த 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில், வசித்து வந்த சுமார் 1,343 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாநகராட்சியின் 58 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாள்தோறும் மூன்று வேளை உணவு, குடிநீர் போன்ற தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும், முகாம்களில் மாநகராட்சி மருத்துவர்களால் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று(நவ.08) மட்டும் நிவாரண முகாம்களில் 47 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1,673 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், 200 வார்டுகளில் 205 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 8,500 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 673 நபர்களுக்குத தோல் சம்பந்தமான சிகிச்சைகளும், 295 நபர்களுக்குக் காய்ச்சலுக்காகச் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளது.