இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வருவாய்த் துறையின் மூலம் நிறுவனங்களின் தொழில் உரிமம் 2020-2021ஆம் நிதியாண்டில் 31.03.2020க்குள் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால், கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நிறுவனங்களின் தொழில் உரிமத்தை எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் புதுப்பிக்க ஏதுவாக, 31.12.2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில் உரிமம் புதுப்பிக்க டிசம்பர் வரை அவகாசம்! - சென்னை மாநகராட்சி
சென்னை: தொழில் உரிமத்தை எவ்வித தண்டத்தொகையுமின்றி வரும் டிசம்பர் இறுதிவரை புதுப்பித்துக்கொள்ளலாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
corporation
எனவே, நிறுவனங்கள் தங்களின் தொழில் உரிமத்தை 31.12.2020 வரை எவ்வித தண்டத்தொகையுமின்றி புதுப்பித்துக் கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அறிகுறிகள் இருக்கும் அலுவலர்களுக்கு பரிசோதனை- தமிழ்நாடு அரசு