அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது. இருப்பினும் தினமும் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கை 500 கீழ் உள்ளது. மேலும், அந்த மண்டலத்தில் பரவலைக் குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் நடத்துவது, மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.
இந்நிலையில், 15 மண்டலங்களில் அடையார் மண்டலத்தில் மட்டும்தான் கரோனா உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 3ஆக உள்ளது. அடையார் மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் அதிகமாக இருக்க காரணம் ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் அதிகமாக மாணவர்களுக்கு பரிசோதனை செய்வதேயாகும். மேலும் ஆலந்தூர், கோடம்பாக்கம் ஆகிய இரண்டு மண்டலங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் இரண்டாக உள்ளது. மீதமுள்ள 12 மண்டலங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் ஒன்றாக உள்ளது.
இதுவரையிலும் இரண்டு லட்சத்து 22ஆயிரத்து 580 நபர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு லட்சத்து 15 ஆயிரம் 603 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 3017 நபர்களும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 3960 நபர்கள் இந்த வைரஸ் தொற்றினால் இறந்துள்ளனர்.
சென்னையில் கரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரியாக நிலைப் பட்டியல் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- அண்ணா நகர் - 24493 பேர்
- கோடம்பாக்கம் - 24014 பேர்
- தேனாம்பேட்டை - 21311 பேர்
- ராயபுரம் - 19559 பேர்
- தண்டையார்பேட்டை - 17084 பேர்
- திரு.வி.க. நகர் - 17733 பேர்
- அடையாறு - 17979 பேர்
- வளசரவாக்கம் - 14473 பேர்
- அம்பத்தூர் - 15774 பேர்
- திருவொற்றியூர் - 6752 பேர்
- மாதவரம் - 8051 பேர்
- சோழிங்கநல்லூர் - 5914 பேர்
- பெருங்குடி - 8207 பேர்
- ஆலந்தூர் - 9138 பேர்
- மணலி - 3540 பேர்