தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 அல்லது 4 மாதங்களுக்கு கரோனா தடுப்பு பணிகள் தொடரும் - ஆணையர் தகவல் - சென்னை மாநகராட்சி

சென்னை: மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு கரோனா தடுப்புப்பணிகள் தொடரும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

commissioner
commissioner

By

Published : Aug 8, 2020, 2:45 PM IST

அயனாவரத்தில் நீலம் தொண்டு நிறுவனம் சார்பில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

கரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைப்பதையே முதல் பணியாகக் கொண்டு, நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வடசென்னை பகுதியிலும் நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. எனினும், சென்னையில் கரோனா தடுப்புப் பணிகள் இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்கு தொடரும். எனவே, மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்

3 அல்லது 4 மாதங்களுக்கு கரோனா தடுப்பு பணிகள் தொடரும் - ஆணையர் தகவல்

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து இணையதளத்தில் 100 விழுக்காடு எளிதாக இ-பாஸ் பெறலாம். இவ்விவகாரத்தில் இடைத்தரகர்களையோ, தனிநபரையோ பொதுமக்கள் நாட வேண்டாம். அவர்களை நம்பி ஏமாறவும் வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details