தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விதியை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை!

சென்னை: பேனர்கள் வைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது, சுவரில் எழுதுவது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

விதியை மீறி பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை!
விதியை மீறி பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை!

By

Published : Feb 28, 2021, 8:19 AM IST

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கண்காணிக்க 48 பறக்கும்படை குழுவும் 48 நிலையான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதனை சென்னை மாநகராட்சி அலுவலகத்திலிருந்து மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். உடன் மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் பிரகாஷ், “தேர்தல் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க 1950 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாளைமுதல் (பிப். 28) முழுமையாக இது செயல்படும். சென்னையில் 40 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் அஞ்சல் மூலம் தங்கள் வாக்குகளைச் செலுத்தலாம். இந்தத் தேர்தலில் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஆறாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குச்சாவடிகள் சென்னையில்தான் உள்ளன.

கரோனா காலம் என்பதால் கட்சிப் பொதுக்கூட்டங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அனைத்துக் கட்சிகளுக்கும் வலியுறுத்தியுள்ளோம். பேனர்கள் வைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது, சுவரில் எழுதுவது போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிக்கப்பட்ட வீட்டின் சுவர்களில் மட்டுமே எழுத வேண்டும்.

48 பறக்கும் படை குழுவுக்கும் 48 நிலையான கண்காணிப்புக் குழுவுக்கும் தனியாக வாக்கி டாக்கி, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...திமுக நேர்காணல் தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details