தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னை மாவட்டத்தில் புதிதாக 16,336 ஆண் வாக்காளர்களும், 16,015 பெண் வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

list
list

By

Published : Dec 23, 2019, 2:28 PM IST

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”சென்னை மாவட்டத்தில் மொத்தமாக 3,754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு 26.03.19 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர்கள் எண்ணிக்கை 19,05,216 ஆகும். சென்னை மாவட்டத்தில் 16,336 ஆண் வாக்காளர்கள், 16,015 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 32,362 பெயர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 5,824 ஆண் வாக்காளர்கள், 3,911 பெண் வாக்காளர்கள் மற்றும் 10 இதர வாக்காளர்கள் என மொத்தம் 9,745 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

எனவே, 16 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 38,88,673 வாக்காளர்கள் உள்ளனர். 1,69,620 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட துறைமுகம் தொகுதி குறைவான வாக்காளர்கள் கொண்டத் தொகுதியாகவும், அதிகமான வாக்காளர்கள் கொண்டத் தொகுதியாக வேளாச்சேரியும் உள்ளது. அதில், 3,03,909 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

இப்பட்டியல் இணையத்தில் பதிவிடப்படும். இதில் திருத்தங்கள் இருப்பின் ஜனவரி 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் சிறப்பு முகாமில் வாக்காளர்கள் தங்கள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்“ எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ‘நடிகர் கமல்ஹாசனுக்கு உலக அறிவு வேண்டும்’ - ஹெச்.ராஜா

ABOUT THE AUTHOR

...view details