தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 10, 2021, 11:58 AM IST

ETV Bharat / city

'கல்லூரியில் கலை நிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்'

சென்னையில் உள்ள கல்லூரியில் கலை நிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டுமெனவும், மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதைக் கண்காணிக்க வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வலியுறுத்தினார்.

கல்லூரியில் கலை நிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்
கல்லூரியில் கலை நிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்

சென்னை: மாநகராட்சி அலுவலகத்தில் உயர் கல்வித் துறை, மருத்துவக் கல்வித் துறை, கல்லூரி கல்வி இயக்குநரகம் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கல்லூரி வளாகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்

இந்தக் கூட்டத்தில் பேசிய பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "மாணவர்கள் வகுப்பறையில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அதேபோல், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். விடுதியில் மாணவர்கள் முகக்கவசம் அணிவது தொடர்பாகப் பாடங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

வகுப்புகளைச் சுழற்சி முறையில் நடத்துக

மேலும், மாணவர்கள் விடுதியில் உணவுக் கூடத்தில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடாது. குழு குழுவாகச் சென்று சாப்பிட அனுமதிக்க வேண்டும், கல்லூரியில் மாணவர்கள் கலை நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். வகுப்புகளைச் சுழற்சி முறையில் நடத்த வேண்டும்.

அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவது குறித்து துறைத் தலைவர்கள் தகவல்களைப் பெற்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அளிக்க வேண்டும்" என வேண்டுகோள்விடுத்தார்.

இதையும் படிங்க:Black Box: வானூர்திகளில் கறுப்புப் பெட்டிக்கு முக்கியத்துவம் ஏன்?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details