தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜனவரி 19 - சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாம்! - மாநகராட்சி ஆணையர்

சென்னை: ஜனவரி 19ஆம் தேதி தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

drops
drops

By

Published : Jan 11, 2020, 4:29 PM IST

கடந்த 24 ஆண்டுகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டும் 19.01.20 அன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 5 வயதுக்குட்பட்ட சென்னை மாநகரின் 7.03 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க, 1,645 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்திருந்த போதிலும், அருகாமை நாடுகளில் போலியோ பாதிப்புகள் இருந்து வருவதால், அவை நம் நாட்டில் உள்ளவர்களுக்கும் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, இந்த ஆண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கும் சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெற இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருப்பூர் ரயில் நிலையத்திற்கு குமரனின் பெயரை சூட்ட கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details