சென்னை: மழை தொடர்பான புகார்கள், பொதுமக்களுக்கான நிவாரண உதவிகள் போன்றவற்றுக்காக பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்கின்ற உதவி எண்ணுக்கும், 044-25619204, 044 25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 ஆகிய தொலைபேசி எண்களுக்கும் 9445477205, 9445025819, 9445025820, 9445025821 ஆகிய வாட்ஸ் ஆப் எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Helplines: மழை தொடர்பான உதவி எண்கள் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு - நிவாரண உதவி
மழைக்கால புகார்கள், நிவாரண உதவிகளுக்கு தொடர்பு கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Helplines
மேலும், மழைப்பொழிவு உள்ள நேரங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள், நீர்வழிக் கால்வாய்கள், மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களின் அருகில் செல்ஃபி, புகைப்படங்கள் எடுக்கக் கூடாது எனவும், தெருவிளக்கு மின் கம்பங்கள், மின்சார இணைப்புப் பெட்டிகளைத் தொடுதல், மரங்களின் கீழ் நிற்றல் ஆகியவற்றைத் தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:2 நாட்களுக்கு உணவுப்பொருட்களை இருப்பு வைத்துக்கொள்க - சென்னை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்