தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிகபட்ச கரோனா தொற்றை பதிவுசெய்யும் ஹைடெக் அண்ணா நகர்! - கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று சற்று உயர்ந்துவந்தது. இந்தப் பரவலை குறைப்பதற்கு மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன. இச்சூழலில் அண்ணா நகரில் அதிகபட்சமாக கரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது.

chennai corona update
chennai corona update

By

Published : Nov 28, 2020, 12:54 PM IST

சென்னை: 15 மண்டலங்களிலும் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 500 என்ற அளவில் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் குறிப்பாக, சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று சற்று உயர்ந்துவந்தது.

இந்தப் பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களும், மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் என, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மாநகராட்சியின் பல்வேறு கட்ட நடவடிக்கையால் நோய் தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை குறைந்து, தினமும் 500 பேர் என்ற எண்ணத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உள்ளது.

தொடர்ந்து குணமடைந்தோரின் 96ஆக உள்ளது. அதிகப்பட்சமாக அண்ணா நகரில் 412 நபர்களும், குறைந்தபட்சமாக மணலியில் 64 நபர்களுக்கு கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுவரையிலும் சென்னையில் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 191 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 2 லட்சத்து 06 ஆயிரத்து 429 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 3 ஆயிரத்து 924 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் 3 ஆயிரத்து 838 பேர் இந்த நோய்த் தொற்றினால் உயிரிழந்தனர்.

மண்டல வாரியான சிகிச்சைபெற்று வருபவர்களின் பட்டியல்.,

  • அண்ணா நகர் - 412 பேர்
  • கோடம்பாக்கம் - 378 பேர்
  • ராயபுரம் - 246 பேர்
  • தேனாம்பேட்டை - 397 பேர்
  • தண்டையார்பேட்டை - 238 பேர்
  • திரு.வி.க. நகர் - 396 பேர்
  • அடையாறு - 402 பேர்
  • வளசரவாக்கம் - 310 பேர்
  • அம்பத்தூர் - 320 பேர்
  • திருவொற்றியூர் - 118 பேர்
  • மாதவரம் - 179 பேர்
  • ஆலந்தூர் - 176 பேர்
  • சோழிங்கநல்லூர் - 80 பேர்
  • பெருங்குடி - 175 பேர்
  • மணலி - 64 பேர்

ABOUT THE AUTHOR

...view details