தமிழ்நாட்டில் கரோனா தீநுண்மி தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 308 ஆக உயர்ந்துள்ளது. மேலும், புதிதாக 16 ஆயிரத்து 665 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
தலைநகர் சென்னையில் மேலும் புதிதாக நான்காயிரத்து 764 நபர்களுக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் 31 ஆயிரத்து 295 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும், அருகிலுள்ள மாவட்டமான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் நோயாளிகள் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவதால் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் காத்திருக்கும் அவலநிலையும் அரங்கேறிவருகிறது.
16,665 நபர்களுக்கு கரோனா
மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (ஏப். 28) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில்,
'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 25 ஆயிரத்து நான்கு நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 16 ஆயிரத்து 632 நபர்களுக்கும் தமிழ்நாட்டிற்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வருகைதந்த 33 நபர்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 665 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை
தமிழ்நாட்டில் இதுவரை இரண்டு கோடியே 20 லட்சத்து ஐந்தாயிரத்து 237 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 11 லட்சத்து 30 ஆயிரத்து 167 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டுபிடிக்க முடிந்தது.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 308 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 15 ஆயிரத்து, 114 நபர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து ஆறாயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில்,
- சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 47 பேரும்,
- அரசு மருத்துவமனையில் 51 நோயாளிகள் என மொத்தம் 98 நபர்கள் இறந்துள்ளனர்.
இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 826ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 3,23,452
கோயம்புத்தூர் - 76,259
செங்கல்பட்டு - 77,483
திருவள்ளூர் - 57,908
சேலம் - 40,365
காஞ்சிபுரம் - 37,218
கடலூர் - 29,586
மதுரை - 29,494
வேலூர் - 26,169
தஞ்சாவூர் - 24,864
திருவண்ணாமலை - 23,371
திருப்பூர் - 25,612