தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 13, 2021, 7:09 AM IST

Updated : May 13, 2021, 9:43 AM IST

ETV Bharat / city

உரிய நேரத்தில் 20 ஆக்ஸிஜன் சிலிண்டர் - சென்னை காவல்துறைக்கு குவியும் பாராட்டு!

ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இன்றி தவித்த நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் 20 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்றுத் தந்த சென்னை காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை காவல்துறை
சென்னை காவல்துறை

சென்னை கொளத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட செங்குன்றம் சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 10 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரையும் வெளியேற்றி வீட்டிற்கு அனுப்ப மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலை அறிந்த கொளத்தூர் காவல்துறையினர், வில்லிவாக்கம் சரக உதவி ஆணையர் ஸ்டீபனுக்கு இதைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் சரக உதவி ஆணையர் ஸ்டீபன் தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அங்குள்ள சூழ்நிலையை நிர்வாகத்திடம் கேட்டறிந்தார்.

அனுப்பப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

பின்னர் கொளத்தூர் காவல்துறையினரின் உதவியுடன் சென்னை மணலியை அடுத்துள்ள சாத்தாங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் (Inox Air Products) ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக்கூறி அங்கிருந்து சுமார் 20 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்று தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

உரிய நேரத்தில் உதவிய காவல்துறை

சூழ்நிலையை புரிந்து கொண்டு தக்க நேரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப் பெற்றுத் தந்து நோயாளிகளை பெரும் பாதிப்பிலிருந்து மீட்டுள்ள கொளத்தூர் காவல்துறையினருக்கும், வில்லிவாக்கம் சரக உதவி ஆணையருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Last Updated : May 13, 2021, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details