தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மூன்று மணி நேரத்தில் மீட்கப்பட்ட சிறுமி: மாநகர காவல் ஆணையர் பாராட்டு - rescue girl

சென்னை: ஆதம்பாக்கத்தில் கடத்தப்பட்ட சிறுமியை மூன்று மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

mahesh
mahesh

By

Published : Sep 13, 2020, 11:27 PM IST

சென்னை ஆதம்பாக்கத்தில் சிறுமி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் காவல் துறையில் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட காவல் துறையினர் கடத்தப்பட்ட சிறுமியை மூன்று மணி நேரத்தில் வடபழனியில் வைத்து மீட்டனர்.

இந்நிலையில், காவல் துறையினரின் துரித நடவடிக்கை குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆதம்பாக்கத்தில் கடத்தப்பட்ட சிறுமி மூன்று மணி நேரத்தில் வடபழனியில் மீட்கப்பட்டுள்ளார். சென்னை காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details