தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரதமர் மோடியை ராகுல் காந்தி விரட்டியடிப்பார் - கே.எஸ். அழகிரி - சென்னை காங்கிரஸ் ஆர்பாட்டம்

மகாத்மா காந்தி எவ்வாறு ஆங்கிலேயர்களை விரட்டினாரோ அதேபோல் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விரட்டி அடிப்பார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை காங்கிரஸ் ஆர்பாட்டம்
சென்னை காங்கிரஸ் ஆர்பாட்டம்

By

Published : Oct 2, 2020, 6:51 AM IST

Updated : Oct 2, 2020, 4:15 PM IST

சென்னை:ராகுல் காந்தியை தாக்கிய காவல் துறையை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலின இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, முதுகெலும்பு உடைந்து, நாக்கு அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

உண்மைக் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இச்சூழலில் நேற்று (அக்டோபர் 1) பகல் இறந்த பெண்ணின் பெற்றோர்களைச் சந்திக்க சென்ற காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி காவல் துறையினரால் நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சென்னை காங்கிரஸ் ஆர்பாட்டம்

மேலும், தொடர்ந்து அவர்கள் நடந்துசெல்ல முயலும்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு காவல் துறை ராகுல் காந்தியை தள்ளிவிடுவது போன்ற காணொலிகள் சமூக வலைதளங்களை வேகமாகப் பற்றிக்கொண்டன. இதனைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் ஆர்பாட்டம் செய்துவருகின்றனர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் தீப்பந்தத்தை கையில் தூக்கி பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

சென்னை காங்கிரஸ் ஆர்பாட்டம்

பின்னர் சத்தியமூர்த்திபவன் முன்பு கே.எஸ். அழகிரி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, “ராகுல் காந்தி செயல்பாடு விளிம்புநிலை மக்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது. நாட்டில் உள்ள பட்டியலின, விளிம்புநிலை மக்களுக்காகப் போராடும் தலைவர் அவர். அவரது போராட்டம் வெற்றிபெறும், ஜனநாயகம் தலைக்கும், இந்த நாட்டில் சர்வாதிகாரம் நீடிக்காது.

ஆங்கிலயர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றிபெற்ற கட்சி காங்கிரஸ். மகாத்மா காந்தி அற்புதமான போராட்டம் மூலம் ஆங்கிலேயர்களை இந்நாட்டை விட்டு துரத்தியதுபோல, சர்வாதிகாரி பிரதமர் நரேந்திர மோடியை தலைவர் ராகுல் காந்தி விரட்டியடிப்பார். அதற்கான சூழல் வந்துள்ளது. தவறுகளுக்கு முடிவு கட்டுவோம்” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ். அழகிரி உள்பட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Last Updated : Oct 2, 2020, 4:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details