சென்னை குன்றத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 24 அடி. நேற்றைய நிலையைப் பொறுத்தவரையில் 21 அடியை எட்டவிருப்பதாகத் தெரியவந்துள்ளது. 22 அடியை எட்டும் பொழுது செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் பகுதியிலும், 19 கண் மதகுகள் பகுதியிலும் உபரி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உபரி நீர் வெளியாகும்போது சென்னை அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், குறிப்பாக திருநீர்மலை, வழுதவம்பேடு, குன்றத்தூர், நத்தம் திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.