சென்னை மயிலாப்பூர் சுந்தர கிராமணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (22). இவர் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இதனிடையே டன்சோ என்னும் மளிகை பொருள் டெலிவரி வேலையை பகுதி நேரமாக செய்துவந்தார். இந்த நிலையில் நேற்று அடையாறு போர்ட் கிளப் 1ஆவது அவென்யூவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
சென்னையில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு - truck accident student killed
சென்னையில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அப்போது, அவரது வாகனத்திற்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து லாரி ஓட்டுநர் லாரியைவிட்டு, அங்கிருந்து ஓடினார். இதுகுறித்து தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட தகவலில், தப்பி ஓடிய லாரி ஓட்டுனர் பெருங்குடியைச் சேர்ந்த இன்பராஜ் என்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க:வளையல் வண்டி விபத்து... தாய், தந்தையைப் பறிகொடுத்து நடுரோட்டில் தவித்த குழந்தைகள்...