தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள் சாதி மத வேறுபாடுகளின்றி அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். உழவுக்கு உரித்தான சூரியனை வணங்குவது, பொங்கல் வைப்பது, பாரம்பரிய உடை அணிவது, கரும்பைக் கடிப்பது என பொங்கல் பண்டிகை நாட்கள் களைகட்டும்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் கிராமங்களில் பொங்கல் வைப்பது போல, கல்லூரியிலும் அழகுற வடிவமைத்திருந்தனர். கல்லூரி வளாகத்தில் குடிசை அமைத்து, மாட்டு வண்டியில் பயணித்து, மாடுகளுக்கு பூஜை செய்தும், மண் பானையில் பொங்கல் வைத்தும், பாரம்பரிய இனிப்பு வகைகளை சமைத்து கல்லூரி மாணவிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.